search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி மோதல்"

    • முகமதுரிதுவான் வடலூர் புதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    கடலூர்:

    வடலூர் ஆபத்தாணபுரம் வ.ஊ.சி நகரை சேர்ந்தவர் ஹஜ்முகமது மகன் முகமதுரிதுவான் (வயது 15). இவர் வடலூர் புதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். டியூஷன் சென்றுவிட்டு சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வடலூர் ரெயில்வே கேட்டுக்கு முன் சென்றபோது பின்னால் வந்த லாரி மோதி யதில் பலத்த காயமடைந்த முகமது ரிதுவான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வடலூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    கடலூர்: 

    கடலூர் அடுத்த அணுகம்பட்டை சேர்ந்தவர் சிவா (வயது 48). பால் வியாபாரி. இவர் பால் வியாபாரம் செய்துவிட்டு கடலூர் பச்சையாங்குப்பம் ெரயில்வே மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சிவா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆட்டோ மீது லாரி மோதி ஒருவர் பலியானார்.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    உசிலம்பட்டி கீழப்புதூர் பாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டி (வயது52). இவரது மனைவி பத்மா. இவர்கள் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தனர். டி.பி. மெயின் ரோட்டில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது. படுகாயம் அடைந்த பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற பயணிகள் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து பாண்டியின் மனைவி பத்மா போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் லாரி டிரைவர் செக்காணூரணியை சேர்ந்த சண்முகம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 19-ந்தேதி மார்க்கெட்டில் காய்கறி விற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
    • இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்ட அடுத்த வி.சாத்தனுரை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 55). இவர் விக்கிவாண்டி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த 19-ந்தேதி மார்க்கெட்டில் காய்கறி விற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அவர் விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் சாலையில் திரும்பினார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சாலை நடுவில் சிமெண்ட் தடுப்பு க்கட்டையில் பலத்த சத்தததுடன் லாரி மோதி நின்றது.
    • நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த வரக்கால்பட்டு பகுதியில் நேற்று நள்ளிரவு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது வரக்கால்ப ட்டு பகுதியில் சாலை நடுவில் சிமெண்ட் தடுப்பு க்கட்டையில் பலத்த சத்தததுடன் லாரி மோதி நின்றது. அப்போது முன்பக்க சக்கரம் அச்சு முறிந்து லாரியில் இருந்த டிரைவர் லேசான காயமடைந்தார். இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இதில் செஞ்சி பகுதியில் இருந்து மாடு எலும்புகளை ஏற்றிக்கொண்ட கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கம்பெனிக்கு கொண்டு சென்ற போது எதிர்பாராமல் சிமெண்ட் தடுப்பு கட்டை மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • காட்டுச் செல்லூரை கடந்த போது பின்னால் வந்த லாரி மோதி மோட்டார் சைக்கிளுடன் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
    • மரிய பிரகாசம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை அருகே உள்ள இறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மரிய பிரகாசம். இவரும் காட்டுசெல்லூர் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் எலவனாசூர்கோட்டையில் இருந்து திருக்கோவிலூர் சென்று கொண்டிருந்தனர். அப்போது காட்டுச் செல்லூரை கடந்த போது பின்னால் வந்த லாரி மோதி மோட்டார் சைக்கிளுடன் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் மரிய பிரகாசம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    படுகாயம் அடைந்து சாலை ஓரத்தில் இருந்த சரத்குமாரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மரிய பிரகாசம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி மீது அரசு பஸ் மோதி இன்று அதிகாலை 5 மணியளவில் விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    பெங்களூரில் இருந்து 30 பயணிகளை ஏற்றிக் கொண்டு திட்டக்குடிக்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை திட்டக்குடியைச் சேர்ந்த டிரைவர் தங்கராஜ் (வயது 47) ஓட்டி வந்தார். இந்த பஸ் உளுந்தூர்பேட்டைக்கு வராமல் எலவனாசூர்கோட்டை ஆசனூர் வழியாக சென்றது. அப்போது ஆசனூர் சிப்காட் அருகே ஒரு வழிப்பாதையில் சென்றது. அப்போது எதிரில் வந்த லாரி மீது அரசு பஸ் மோதி இன்று அதிகாலை 5 மணியளவில் விபத்துக்குள்ளானது. இதில் அரசு பஸ்சின் கண்டக்டர் தேவேந்திரன் (54), திட்டக்குடியைச் சேர்ந்த பயணிகள் இந்திராகாந்தி (58), நீலாவதி (50), மோகன் (55), பெரம்பலூர் ராஜேந்திரன் (55), பெங்களூரு சந்துரு (25), லாரி கிளினர் அஜித் (25) ஆகியோர் உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எடக்கல் போலீசார், படுகாயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டும் என்பதால் ஒரு வழிப்பாதையில் அரசு பஸ் சென்றதால் இந்த விபத்து நடந்தது. இது குறித்து எடக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அங்கு அவருக்கு சொந்தமான கறவை மாடுகள் உள்ளன.
    • உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கல்லூர் மேற்குத் தெருவில் வசித்து வருபவர் ராஜ பெருமாள் (வயது 70). இவர் தனது மனைவியுடன் ஆவட்டி கூட்ரோட்டில் வசித்து வருகிறார். இவர் தினந்தோறும் காலையில் சொந்த ஊரான கல்லூர் செல்வார். அங்கு அவருக்கு சொந்தமான கறவை மாடுகள் உள்ளன. பால் கறந்து விற்பது வழக்கம். அதேபோல் இன்று காலை பால் கறக்க தனது மனைவியுடன் கூட்ரோட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அந்த நேரத்தில் மனைவியை சாலை ஓரம் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கி வருமாறு கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சாலையை கடந்தார்.

    அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி ராஜபெருமாள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜபெருமாள் துடிதுடித்து பரிதாமபாக உயிரிழந்தார். கண் எதிரே லாரி மோதி கணவர் உயிரிழந்ததால் மனைவி கதறி அழுத காட்சி அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் போலீசார் உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே லாரி மோதி பெயிண்டர் பலியானார்.
    • இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை வாடிப்பட்டி அருகே உள்ள திருவாழவாயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் முனுசாமி (வயது 27). இவருக்கு திருமணமாகி மனைவி சுந்தரலட்சுமி, 1 மகன் உள்ளனர். இந்த நிலையில் முனுசாமி மற்றும் அவரது உறவினர் ஆறுமுகம் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் விமான நிலைய பகுதியில் பெயிண்டிங் வேலைக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி, அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    காயம் அடைந்த ஆறுமுகம் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான முனுசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மயிலம் அருகே சாலை ஓர தடுப்புக்கட்டையில் லாரி மோதி டிரைவர் பலியானார்.
    • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை நாகப்பட்டினம் மாவட்டம் திருகுவளை பகுதியை சேர்ந்த குமரேசன்(26), என்பவர் ஓட்டி சென்றார். மயிலம் அருகே விளங்கம்பாடி அய்யனா ரப்பன் கோயில் எதிரே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த இரும்பு தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மயிலம் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கடலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 3 பேர் காயமடைந்தனர்.
    • குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் பெரிய செவலை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30), தனது மனைவி விஜயபாரதி வயது 26 , சசோந்த் (2 வயது குழந்தை) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சத்திரம் - குள்ளஞ்சாவடி சாலையில் அம்பலவாணன் பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி திடீரென்று முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி மூன்று பேரும் கீழே விழுந்தனர். இந்த விபத்தில் 2 வயது குழந்தை மற்றும் தாய், தந்தை ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். விபத்தில் காயம் அடைந்த மூன்று பேரையும் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருத்தாசலம் அருகே கல்லூரி பஸ் மீது லாரி மோதியதில் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
    • சம்பவத்தை பார்த்த அருகிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் தொழுதுரை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி பஸ் இன்று காலை மாணவர்களுடன் விருத்தாசலத்தில் இருந்து தொழுதூர் நோக்கி கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது விருத்தாசலம் அடுத்த சாத்தியம் என்ற இடத்தில் அருகே நின்று கொண்டு மாணவர்களை பேருந்திற்குள் ஏற்றி கொண்டிருந்தபோது விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் நோக்கி சென்ற லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த கல்லூரி பஸ்சின் பின்புறம் பலமாக மோதியது.

    இதில் பஸ்சில் இருந்த 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை பார்த்த அருகிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்தனர். விபத்தில் காயம் அடைந்த கல்லூரி மாணவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும், பலத்த காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக கடலூர் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்.சம்பவம் குறித்து விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்த விருத்தாசலம் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×